பிரச்சாரத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “இச்“ : அதிர்ந்து போன பரப்புரை கூட்டம்!!

6 February 2021, 2:24 pm
Udhayanithi Kiss - Updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் படு தீவிரமாக தேர்தல் களப்பணியாற்றி வருகின்றனர். தமிழக்ததில் பிரதான அரசியல் கட்சியான அதிமுக, திமுக சூறாவளி பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் திமுக சார்பாக விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சார பயண்தில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உதயநிதி நேற்று உளுந்தூர்பேட்டை, சின்ன சேலம், சங்கராபுரம் போன்ற பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது சங்கராபுரத்தில் பிரச்சார வாகனத்தின் நின்ற படி பேசிய உதயநிதி, முதலமைச்சர் பழனிசாமி ஆட்சி குறித்து விமர்சனம் செய்ததற்கு என் மீது வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என்றும், நான் கலைஞர் பேரன் என பேசினார்.

பின்னர் பாஜக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து பேசிய உதயநிதி தனது பரப்புரையை முடித்து அங்கிருந்து புறப்பட முயன்றார். அப்போது அவர் வாகனத்தில் ஏறிய மதுபோதையில் இருந்த நபர் திடீரென உதயநிதிக்கு முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத உதயநிதி மிரண்டு போனதால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Views: - 0

0

0