தங்கம் விலை மீண்டும் உயர்வு: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்..!!

25 March 2021, 2:23 pm
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில்துறையில் ஏற்பட்ட தேக்கத்தால், பாதுகாப்பான முதலீடுகளில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தினர். இதன் காரணமாக தங்கத்தில் அதிக மூதலீடுகள் செய்யப்பட்டதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.

தொழில்துறை தேக்கத்தால் பொருளாதார பாதிப்பு குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இதற்கிடையில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.33,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,235க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Views: - 0

0

0