தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவடைகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
17 August 2021, 4:29 pm
Quick Share

சென்னை: செப்டம்பர் 21ம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, 13ம் தேதியே நிறைவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்தார். 14ம் தேதி வேளாண் நிதிநிலைஅறிக்கையை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த இரு பட்ஜெட்டுகளும் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதம் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை குறைப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டசபை கூட்டத்தொடர் ஒருவாரம் முன்னதாக செப்டம்பர் 13ஆம் தேதியே நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவு பெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என, சபாநாயகர் மு.அப்பாவு சட்டசபையில் அறிவித்தார்.

Views: - 194

0

0