சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் : மரத்தில் கட்டி வைத்து “தர்ம அடி“

5 October 2020, 1:31 pm
Harrassment- updatenews360
Quick Share

திருப்பூர் : சிறுமிகளுக்கு பாலியல்தொல்லை கொடுக்க முயன்ற இளைஞரை மரத்தில் கட்டிவைத்து காவல்துறையிடம் கிராமமக்கள் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ராவனாபுரம் பகுதியை சார்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி இவருடன் வாழாமல் சென்றுவிட இருகுழந்தைகளுடன் சந்தோஸ்குமார் வசித்து வந்துள்ளார்

இந்நிலையில் இவரது வீட்டின் அருகே வசித்துவரும் 13 வயது சிறுமி அவரது தோழியுடன் ஊர் ஒதுக்குபுரத்தில் செல்ல பின் தொடர்ந்த சந்தோஷ்குமார் சிறுமியிடம் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொள்ள முயன்றுள்ளார். இதனைகண்டு சத்தம் போட்ட சிறுமியின் தோழியிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனிடையே சிறுமிகளின் சத்தம் கேட்டு ஒன்று திரண்ட கிராம மக்கள் சந்தோஷ்குமாரை பிடித்து மரத்தில் கட்டிவைத்து குடிமங்களம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்த குடிமங்கலம் காவல்துறையினர் சந்தோஸ்குமாருக்கு மருத்துவபரிசோதனை செய்து விசாரித்து வருகின்றனர்..

Views: - 45

0

0