பாலத்தில் இருந்து சரக்கு ரயில் மீது குதிக்த திருடன் : மின்சார கம்பி உரசி பலியான சோகம்!!

4 November 2020, 11:41 am
Railway Dead - Updatenews360
Quick Share

சேலம் : ரயில்வே மேம்பாலத்திலிருந்து கீழே குதித்த திருடன் மின்சாரம் கம்பி மீது விழுந்து கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பொன்னம்மாபேட்டை திப்பு நகர் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது கூலி வேலை செய்து வருகின்றார். இவரின் இரண்டாவது மகன் முகமது உசேன் (வயது 16) வேலை எதுவும் சொல்லாமல் ஊர் சுற்றி திறந்து வந்துள்ளார்.

பெற்றோர் பேச்சு கேட்காத மகனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் முகமது ஹசேன் தனது சகோதரர் உடன் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து கிளம்பிய இவர் செவ்வாய் பேட்டை பால் மார்க்கெட் சென்றுள்ளார்.

அங்கு நண்பர்கள் பேசி கொண்டிருந்த இரவு நேரம் ஆனதால் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அருகே உள்ள மேம்பாலத்திலிருந்து கீழே நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது குதித்துள்ளார் அப்போது ரெயிலில் மேலே இருந்த உயரழுத்த மின் கம்பி விழுந்து மின்சாரம் தாக்கி உடனே தூக்கி வீசப்பட்டார்.

இதில் முகமது உசேன் சம்பவ இடத்திலேயே தீக்கறையாகி உயிரிழந்தார் .இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் செவ்வாய் பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் உயிரிழந்த முகமது உசேன் மீது பல்வேறு திருட்டு வழக்கு உள்ளது என தெரியவந்தது.
மேலும் ரெயில்வே மேம்பாலத்திலிருந்து நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் குதித்து எதேனும் திருட முயன்ற போது எதிர்பாராமல் மின் கம்பி மீது விழுந்து உயிரழந்தாரா அல்லது வேறு இதேனும் காரணமா என காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரோதபரிசோதனை அனுப்பி வைத்தனர்.

ரெயில்வே பாதையில் இளைஞர் உயிரிழந்தால் ரயில்வே காவல் துறையினருக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேல் பாலத்தில் கீழே குதித்த போது மின்சார தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Views: - 25

0

0