இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை கொலை செய்த மனைவி : ஆதரவின்றி தவிக்கும் பிஞ்சுகள்!!

23 January 2021, 12:41 pm
Kovilpatti Murder - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டியில் 2வது திருமணம் செய்ய முயன்ற மில் தொழிலாளியை அவரது மனைவி வெட்டி படுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்ப ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்த ஆதிலிங்கம் என்பவரது மகன் பிரபு (வயது 38). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி உமாமகேஷ்வரி (வயது 30) என்ற மனைவியும், ஆதிசிவன்(வயது 7), காவியாஸ்ரீ (வயது 4) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.

பிரபு மது அருந்தி விட்டு அடிக்கடி உமாமகேஷ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவிலும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த பிரபு, மனைவி உமாமகேஷ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உமாமகேஷ்வரி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரபுவை வெட்டியுள்ளார். பிரபு கழுத்து மற்றும் கையில் வெட்டு விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த பிரபு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்துள்ளார். ஆனால் வீட்டில் அருகில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து பிரபு உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உமாமகேஷ்வரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பிரபுவிற்கு வேறு பெண் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தனது மனைவியிடம் மது போதையில் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உமாமகேஷ்வரி பிரபு வெட்டி கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Views: - 7

0

0