இப்படியுமா ஒரு அஜாக்கிரதை! செல்போன் பேசியபடியே சென்ற பெண் கிணற்றில் விழுந்து பலி!!

27 September 2020, 2:01 pm
Ambur Lady Dead - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி குட்டகந்தூர் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி அவரது மனைவி லக்சனா. அவரது வீட்டின் அருகே உள்ள அவர்களது விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடி சென்ற பொழுது திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.

பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கிணற்றில் விழுந்த லக்சனா காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்காமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடனடியாக விரைந்து வந்த உமராபாத் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் உறவினர்கள் இடையே விசாரணை நடைபெற்று வருகிறது.