கள்ளச்சாராய வியாபாரியின் பிறந்தநாளில் பங்கேற்ற காவல் ஆய்வாளர்! அதிரடி மாற்றம்!!

20 August 2020, 5:16 pm
Inspector Suspend - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே பிரபல கள்ளச்சாராய வியாபாரியுடன் கேக் ஊட்டி  பிறந்தநாள் கொண்டாடிய காவல் உதவி ஆய்வாளர்  விஸ்வநாதன் ஆயுதபடைக்கு மாற்றம் செய்து எஸ்.பி விஜயக்குமார் உத்தரவிட்டுள்ளார். 
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஸ்வநாதன். இவர் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டாளம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பவர் அஜித்.

இவருடைய தாய்மாமன் ஜானகிராமனும் கள்ளச்சாராய வியாபாரி கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். அதேபோல் அவருடைய மாமா ஜானகிராமனும் கடந்த மாதம் கள்ளசாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். 

இந்நிலையில் கடந்த 16.8.2020 கள்ளச்சாராய வியாபாரி அஜித் தனது வீட்டில் பிறந்தநாளை கொண்டாடினார். இந்த  பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உமராபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் கலந்து கொண்டு கேக் ஊட்டியும், சால்வை அணிவித்து  பிறந்த நாள் கொண்டாடி உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டு  உடனடியாக அந்த உதவி ஆய்வாளர் விஸ்வநாதனை திருப்பத்தூர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு சாராய வியாபாரி பிறந்த நாளில்  குற்றங்களை தடுக்க வேண்டிய காவல் உதவி ஆய்வாளர் கலந்து  கொண்டது. அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சமூக விரோதிகளுக்கு காவல்துறையினரே உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Views: - 33

0

0