கொடைக்கானலில் பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவில் தேர் திருவிழா : கொடியேற்றத்துடன் துவக்கம்!!
31 January 2021, 9:35 amதிண்டுக்கல் : கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சுமார் 15 கிமீ தொலைவில் பூம்பாறை கிராமம் அமைந்துள்ளது. இங்கு 3000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு குழந்தைவேலப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது.
வருட வருடம் தை மாதத்தை ஓட்டி கொடியேற்றதுடன் திருவிழா நடைபெரும். இந்நிலையில் முருகனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வெகு சிறப்பாக கொடியேற்றமானது தமிழர்களின் பாரம்பரிய இசை கருவிகளை இசைத்தும் மற்றும் வனவேடிக்கைகளுடன் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்ற விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி திருத்தேர் விழா நடைபெரும்.
0
0