திருப்பூரில் ஆட்சியர் கொடியேற்றினார்.! சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வெகுமதி.!!
15 August 2020, 10:32 amதிருப்பூர் : இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றிவைத்து 3 கோடியே 67 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்திய நாடு முழுவதும் இன்று 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது . அதனையொட்டி திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 70 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மேலும் பல்வேறு அரசுத்துறை மற்றும் தன்னார்வலர்கள் 279 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும் பல்வேறு அரசு துறைகளுக்கு 3 கோடியே 67 லட்சத்து 64 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகளைய்ம் வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பளர் , மாநகர காவல் ஆணையர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.