திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் கடும் சரிவு : 2020ஆம் ஆண்டின் வர்த்தகம் எவ்வளவு தெரியுமா?

6 January 2021, 6:06 pm
Tirpur Knitwear Exports - Updatenews360
Quick Share

திருப்பூர் : கொரோனா பாதிப்பால் 2020ம் ஆண்டில் கடும் சரிவை சந்தித்துள்ள பின்னலாடை ஏற்றுமதி அதன்படி ரூ.21 ஆயிரத்து 741 கோடிக்கு மட்டுமே வர்த்தகம் நடந்துள்ளது.

திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் நடந்து வருகிறது. இதனால் பின்னலாடை தொழில் தொடர்புடைய அனைத்து ஜாப் ஒர்க் நிறுவனங்களும் ஆண்டு முழுவதும் திருப்பூரில் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஆடை தயாரிப்பு நடந்தாலும், அதிகளவு வருவாய் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் திருப்பூர் தான் மத்திய, மாநில அரசுகளுக்கு ஈட்டிக் கொடுக்கிறது. இந்த தொழில் மூலம் அன்னிய செலாவணியும் அதிகளவு கிடைத்து வருகிறது. அரசின் வருவாயில் திருப்பூரின் பங்கு மிக முக்கியமாக இருந்து வருகிறது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் திருப்பூரின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகமும் அதிகரித்து வந்தது. இதனால் ஒரு லட்சம் கோடியை வர்த்தக இலக்காக நிர்ணயம் செய்து தொழில்துறையினர் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே கொரோனா பாதிப்பின் காரணமாக வர்த்தக இலக்கை அடைவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு பிரச்சினைகளை பின்னலாடை தொழில் சந்தித்தது. இதில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.55 ஆயிரத்து 474 கோடிக்கு நடந்தது. இதில் திருப்பூரின் ஏற்றுமதி ரூ.28 ஆயிரத்து 458 கோடி ஆகும்.

ஆனால் 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.42 ஆயிரத்து 630 கோடிக்கு நடைபெற்றுள்ளது. இதில் திருப்பூரின் பங்கு ரூ.21 ஆயிரத்து 740 கோடியாக குறைந்துள்ளது.

Views: - 55

0

0