திரையரங்குகள் திறப்பு குறித்து புதிய தகவல் : அமைச்சர் அறிவிப்பு!!

25 August 2020, 4:13 pm
Minister Byte - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கொரோனா குறைந்து சகஜ நிலைக்கு வந்த பின்னர் தான் திரையரங்குகளை திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பெரியசாமிபுரத்தில் புதிய நியாயவிலை கடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதை போன்று வானரமுட்டியில் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் ஓடிடி என்பது தமிழகம் மட்டுமல்ல உலகளாவிய பிரச்சினை, ஓடிடியில் திரைப்படம் வெளியீடு தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஏதும் இல்லை, சூழ்நிலையை கருத்தில் கொண்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் நடிகர்கள் திரைப்படத்துறையினர் நலன் கருதி கலந்து பேச வேண்டும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து முடிவு வெடுக்க வேண்டும்.

பலஆயிரம் திரைப்பட தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது, அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் நடிகர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம், ஓடிடி யில் திரைப்படம் வெளியிடப்படுவது ஆரோக்கியமானது அல்ல என்பது எனது கருத்து என கூறினார்.

திரைப்படத் துறையினர் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு உதவி செய்யும். திரையரங்குகளை திறக்க சில காலம் ஆகும் என்பதால் வேறு வழி இல்லை என்று கூறி ழுவுவுயில் திரைப்படம் வெளியிடுவதை விட சில காலம் பொறுப்பு தான் நல்லது. திரையரங்குகள் ,ஷாப்பிங் மால் உள்ளிட்டவர்கள் அதிகளவில் மக்கள் சமூக இடைவிடாமல் கூடும் நிலை இருப்பதால் திரையரங்குகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை.

கொரோனா குறைந்து சகஜ நிலைக்கு வந்த பின்னர் தான் திறக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கை வைத்து திரையரங்குகளை இயக்க அனுமதி கொடுத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும்.காலப்போக்கில் ஏற்படும் சூழ்நிலையை பொருத்து அரசு முடிவு செய்யும்,பொதுப் போக்குவரத்து தடை நீக்கம் குறித்து சூழ்நிலைக்கேற்ப முதல்வர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.

Views: - 1

0

0