என்னது பென்ஷன் கட்டா..? ஓய்வூதியதாரர்களுக்கு எச்சரிக்கை!!

17 August 2020, 4:45 pm
Pension Fund - Updatenews360
Quick Share

சென்னை : 6 மாதங்களாக வங்கி கணக்கில் உள்ள பென்ஷன் பணத்தை எடுக்காவிட்டால் பென்ஷன் நிறுத்தப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழக அரசு கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் அனைத்து மண்டல அலுவலர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருவதாகவும், இந்த வங்கிக் கணக்குகளில் கடந்த 6 மாதங்களாக பணப்பரிவர்த்தனை நடைபெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

அப்படி பணபரிவர்த்தனை நடைபெறாவிட்டால், சம்மந்தப்பட்ட வங்கி இதுகுறித்து, கருவூலத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் சம்மந்தப்பட் ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டாலோ, அல்லது வங்கிக் கணக்கு குறித்த விபரங்களை ஆய்வு செய்யா விட்டாலோ அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து சேமிப்பு உள்ளிட்ட இதர பணங்களை தவிர்த்து ஓய்வூதியத் தொகையை மட்டும் திரும்ப எடுத்துக் கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது கணக்குத்துறையில் வரையறுக்கப்பட்டுள்ள விதி என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் 6 மாத்திற்கு ஒரு முறையாவது தங்களது கணக்கில் இருந்து பணபரிவர்த்னை செய்யாவிட்டால் பென்ஷன் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது.

Views: - 41

0

0