நடிகர் சங்க பிரச்சினையில் இரு தரப்பையும் அழைத்து பேச அரசு தயார் : அமைச்சர் கடம்பூர்.செ ராஜூ

19 September 2020, 5:15 pm
Minister Kadamboor Raju - updatenews360
Quick Share

தூத்துக்குடி : நடிகர் சங்க பிரச்சினை தொடர்பாக இரு தரப்பையும் அழைத்து பேச அரசு தயாராக உள்ளதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் மகாகவி பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை மூலமாக இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு இளநிலை உதவியாளர் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதில் விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில்எம்ஜிஆர் ,ஜெயலலிதா வழியில் நடிகர் சங்கத்தின் மீது அக்கறை கொண்டுள்ள அரசாக இந்த அரசு,திரைப்படத்துறையினர் வைக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து வருகிறோம்,இரு தரப்பினரும் போட்டி இல்லாமல் சமாதானமாக கலந்து பேசி ஒரு மனதாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி உள்ளோம்,அதற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்று பலமுறை தெரிவித்துள்ளோம்.

இதே கருத்தைத்தான் நீதிமன்றமும் சொல்லி உள்ளது,இனியாவது இருதரப்பினரும் பேசி சமரசத்திற்கு முன்வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும், அரசு விதிகளின்படி தான் நடிகர் சங்க தேர்தல் எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது,தேர்தல் தேவையில்லை என்று பலமுறை நாங்கள் சொல்லி இருக்கிறோம், இனியும் காலம் கெட்டுப் போகவில்லை அவர்கள் பேசி ஒன்றாக வந்தால் பேச்சுவார்த்தைக்கு கூட முதல்வர் அனுமதி, ஆலோசனை பெற்று எங்கள் துறையின் மூலமாக உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்