கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலின் : குடும்ப அரசியல் குறித்து அமைச்சர் கருத்து.!!

13 August 2020, 1:41 pm
Kadamboor Raju - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : 2வது இடத்திற்கு வருவதற்கு தான் திமுக – பாஜக இடையே போட்டி உள்ளதாகவும், கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப் படுத்தப்படுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் செ ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு வண்டணம் மற்றும் குமாரபுரம்( எ) கலிங்கப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கும் பணியை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2 வது இடத்திற்கு வருவதற்கு தான் திமுக – பாஜக இடையே போட்டி என்று வி‌‌.பி. துரைசாமி கூறி இருக்கலாம். கடந்த 2011ல் எங்கள் அணியில் இணைந்து தேமுதிக எதிர்கட்சியானது, அதைப் போன்று தற்போது எங்கள் அணியில் பா.ஜ.கவிற்கு எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது.

அதற்காக மறைமுகமாகத் தெரிவித்து இருக்கலாம்,திமுக பாஜக இடையே 2வது இடத்திற்கு தான் போட்டி என்பது திமுகவில் இருந்த வி.பி.துரைசாமி மறைமுகமாக தெரிவித்துள்ளார். திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவர்கள் என்று மு.க. அழகிரி தெரிவித்து வருகிறார்.

திமுகவில் நடப்பது குடும்ப அரசியல், ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு திமுக அரசியலை முன்னிறுத்தி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

மு.க.ஸ்டாலின் கனிமொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை,‌கனிமொழி மு.க.ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லைஎன்றும், ஆகையால்தான் கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் முன்னிலை நிறுத்தி வருகிறார்.

இதனால்வி.பி.துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் போன்றோர் திமுகவில் இருந்து வெளியேறி பாஜக சென்றுள்ளனர். திமுகவில் இருந்து நீக்கி பார்க்கட்டும் என்று கு.க.செல்வம் சாவல் விட்டுள்ளார். திமுகவில் மனக்குமுறல் உள்ளது என்பது எங்களைவிட மு.க. அழகிரிக்கு தான் நன்றாக தெரியும், எனவே அவர் கூறிய கருத்து திமுகவில் பிரதிபலிக்கும் சூழ்நிலை உள்ளது என்றார்.

Views: - 27

0

0