குற்றங்களை தடுக்க வாகன கண்காணிப்பு கேமரா: தூத்துக்குடி எஸ்.பி. தொடங்கி வைத்தார்

12 November 2020, 3:16 pm
tuticorin Spl Vechicle - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டியில் தீபாவளி பண்டிகை காலத்தில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலவும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சீர்செய்யவும், குற்றச்செயல்களை தடுக்கவும், கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்த காவல்துறை முடிவு செய்தனர்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் நான்கு சக்கர வாகனத்தில் நான்கு திசைகளிலும் கண்காணிக்கக் கூடிய அளவில் சுழலும் கேமரா பொருத்தப்பட்டுள்ள ரோந்து வாகனம் மூலம் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் சென்று கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரோந்து வாகன தொடக்க விழா கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் கலந்து கொண்டு கொடியை அசைத்து ரோந்துவாகனத்தின் செயல்பட்டினை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைகதிரவன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நாராயணன் மற்றும் கார், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 22

0

0