பட்டாக் கத்தியால் ‘பர்த் டே’ கேக் வெட்டிய இளைஞர்: வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு..!!

6 March 2021, 1:40 pm
maduria1 - updatenews360
Quick Share

மதுரை: இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புதூர் பகுதியில் உள்ள தேசிய விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் பாலமுருகன். இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் 10க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் சேர்த்து விழாவை கொண்டாடியுள்ளனர்.

பிறந்த நாள் விழாவில் 3 அடி உயர பட்டாக் கத்தியால் பாலமுருகன் கேக்வெட்டியுள்ளார். தற்போது, பட்டாக் கத்தியால் கேக் வெட்டும் வீடியோ வாட்ஸப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே, பல்வேறு இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்து கம்பி எண்ண வைத்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 39

0

0