‘தடுப்பூசி போடுங்க….பரிசுகளை அள்ளுங்க’: குலுக்கல் முறையில் பரிசுகளை அறிவித்த மதுரை மாநகராட்சி..!!
Author: Aarthi Sivakumar10 October 2021, 12:57 pm
மதுரை: கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் செல்போன், வாஷிங் மெஷின் போன்ற பரிசுகளை மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் இன்று 30 ஆயிரம் இடங்களில் 5வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
தடுப்பூசி போட்டு கொள்ள மதுரை மக்களை கவரும் வகையில், செல்போன், வாஷிங் மெஷின் மற்றும் குக்கர் போன்ற பரிசுகளை மதுரை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதன்படி, கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு பரிசு பொருட்கள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என்றும் மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
0
0