நலவாரியம் அமைத்துக் கொடுத்தால் அரசின் பின்னால் நிற்போம் : கிறிஸ்தவ கூட்டமைப்பினர் மனு

1 February 2021, 12:47 pm
Christsians Petition- Updatenews360
Quick Share

கோவை : இந்துக்கள், முஸ்லீம்களுக்கு நலவாரியம் இருப்பதைப்போல் கிறிஸ்தவர்களுக்கும் நலவாரியம் அமைத்துக்கொடுத்தால் வரும் தேர்தலில் அரசுக்கு சாதகாமாக இருப்போம் என்று அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.

அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். இதநை தொடர்ந்து பிஷப் சகாயராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் பல மிஷனரிகள் மக்களின் நலவாழ்வுக்கு நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்.

கஷ்டப்படும் மக்களுக்கு நலவாரியங்கள் அமைத்து நல்லது செய்துள்ளது தமிழக அரசு. ஏற்கனவே இஸ்லாமிய மக்களுக்கு உலமாக்கள் நல வாரியமும், இந்துக்களுக்கு பூசாரிகள் நலவாரியமும் உள்ளது.

அதேபோல், கிறிஸ்தவர்களுக்கு ஊழியர்கள் நலவாரியம் அமைக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். இதை அமைத்து கொடுத்தால் வரும் காலத்திலும் அரசுக்கு உறுதுணையாக நிற்போம். வரும் தேர்தலில் கிறிஸ்தவ மக்கள் நல்ல பதிவை கொடுப்பார்கள்.” என்றார்.

Views: - 0

0

0