கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு இணையதளம் அறிவிப்பு : நெரிசலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி அதிரடி திட்டம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2021, 12:58 pm
Vaccine Reservation -Updatenews360
Quick Share

மதுரை : 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்த இணையதளத்தில் முன்பதிவு செய்வதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 7, 11,313 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இன்று 30,180 டோஸ் கையிருப்பில் உள்ள நிலையில் 60 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட 2,10,484 பேரும் 2வது தவணையை 8,471 பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர்

சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் 2ம் தவணையை செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். வரும் திங்கள்கிழமை முதல் 18 முதல் 44 வயதுக்கு மேற்பட்டோருக்கு அனைத்து மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்புசி செலுத்திக்கொள்ள http://www.maduraicorporation.co.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதற்காக இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவின்போது அறிவிக்கப்படும் தேதி மற்றும் நேரத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது

Views: - 203

0

0