மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை காரணமாக ஜவ்வாது மலைக்கு இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள்..!

20 August 2020, 3:42 pm
Quick Share

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை காரணமாக கண்ணைக்‍கவரும் பட்டாம்பூச்சிகள் ஜவ்வாது மலைக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

பட்டாம்பூச்சிகள் என்றாலே அழகுதான். வானவில்லின் வர்ணத்தை உடலில் சுமந்துகொண்டு உலா வரும் பட்டாம் பூச்சிகள் பொதுமாக அடர் வனங்களில் வாழ்ந்து வரும்.

இயற்கை சூழல் கொஞ்சும் இடங்களில் உணவும், இனவிருத்திக்கும் வாய்ப்பு உள்ளதால் அவை காடுகளிலேயே அதிக அளவு காணப்படுகிறது. இந்தியாவிலும் ஆயிரக்கணக்கில் விதவிதமான பலவகை வண்ணத்து பூச்சிகள் உண்டு.

அந்த வகையில், தமிழகத்தின் கோவை மாவட்டம் அதன் தொடர்சியாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏராளமான பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன.

ஆனால், கடந்த சில வாரங்களாக அங்கு பெய்து வரும் கனமழையால் பட்டாம்பூச்சிகள் இடம் பெயற தொடங்கியுள்ளது. அந்த வகையில், கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அங்கமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை போன்ற மலைப்பிரதேசங்களை நோக்கி பட்டாம்பூச்சிகள் படையெடுத்துள்ளன.

ஜவ்வாது மலையில் அதிக அளவிலான புரசை மரம் , எலந்தை மரம், காட்டு எலுமிச்சை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க மரங்கள் உள்ளதால் பட்டாம்பூச்சிகள் அதில் இனவிருத்தி செய்து பல வர்ண பட்டாம் பூச்சிகளாக பறந்து உலா வருகிறது. இதை அப்பகிதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Views: - 45

0

0