அரிவாளால் வெட்டி ஆற்றில் வீசப்பட்ட இளைஞர்..! கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மேலும் ஒரு கொலை முயற்சி..!

By: Babu
6 October 2020, 12:34 pm
pondy crime - updatenews360
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் இளைஞர் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாக வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் ஆற்றின் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த நபர் யார்..? யார் அவரை வெட்டி ஆற்றில் வீசியது..? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வெட்டுபட்ட இளைஞர் ஐய்யங்குட்டி பாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (24) என்றும், இவர் காரைக்காலில் கொலை செய்யப்பட்ட கொஃபு கார்த்தி கொலை வழக்கின் முக்கிய சாட்சி என்பதும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அரவிந்த் ஜயங்குட்டிபாளையம் அடுத்த தமிழக பகுதியான இந்திரா நகரில் நேற்று மாலை கடத்தப்பட்டதாக வானூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, அரவிந்தை கடத்தியவர்களே அவரை வெட்டி ஆற்றில் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 59

0

0