தொட்டியில் விழுந்து 2 வயது சிறுவன் பலி: பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் விசாரணை

19 April 2021, 5:33 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 2 வயது சிறுவன் தொட்டியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்மன் குளம் என்ற பகுதியில் ராஜேஷ் உஷாநந்தினி தம்பதிகள் வசித்து வருகின்றார்கள் . ராஜேஷ் திம்மசமுத்திரம் பகுதியில் பால் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணி புரிகின்றார் . இந்தத் தம்பதிகளுக்கு ஜெஸ்ஸிதா என்ற 7 வயது சிறுமியும் ரக்க்ஷித் என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இன்று ராஜேஷ் வேலைக்கு சென்று விட உஷா நந்தினி வீட்டுக்கு சற்று தொலைவில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டார். எப்போது வேலைக்கு சென்றாலும் உஷா நந்தினி தனது ஆண் குழந்தையை அழைத்துக்கொண்டு செல்வார். இன்று வீட்டுக்கு பக்கத்திலேயே 100 நாள் வேலை நடப்பதால் ஜெஸ்ஸிதாவையும் ரக்க்ஷித்தாவையும் வீட்டருகே விளையாட விட்டுவிட்டு உறவினர்களிடம் கூறிவிட்டு வேலைக்கு சென்றார்.

விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை காணவில்லை என ஜெஸ்ஸிதா கூறியதை அடுத்து உஷா நந்தினி மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் தேடி பார்த்தனர் .இவர்கள் வீட்டின் அருகே தண்ணீர் பிடிக்கும் தொட்டியில் குழந்தை விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர் . 108 அவசர ஊர்திக்கு தகவல் கூறி விட்டு குழந்தையை மீட்டனர். 108 அவசர ஊர்தி குழந்தையை தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்து சென்றது. அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். குழந்தையை பறிகொடுத்த உஷார் நந்தினியும் ராஜேஷ் கதறி அழுதது அங்கு உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.

Views: - 22

0

0