கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கடல் வழியாக கடத்தல்; 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

11 November 2020, 8:57 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கடல் வழியாக ரேஷன் அரிசி கடத்தபடுவதாக கடலோர காவல் குழுமத்திற்கு வந்த ரகசியதகவலையடுத்து கன்னியாகுமரி ரட்சகர்தெருவில் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது ரட்சகர் தெருவில் பாழடைந்த வீட்டில் 100 சாக்குமூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தபோலீசார் புட்செல் போலீசிடம் ஓப்படைத்தனர்.

Views: - 19

0

0