தூத்துக்குடி தூய பனிமயமாதா பேரலாயத்தில் 439வது ஆண்டு திருவிழா : ஆயர் கொடியேற்றி துவக்கி வைத்தார்!!

Author: Udayaraman
26 July 2021, 2:38 pm
Thoothukkudi Church - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : உலக பிரசித்திபெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 439-வது ஆண்டு திருவிழா கொரோனா காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி கொடியேற்றி வைத்தார்.

தூத்துக்குடி திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் பனிமய மாதா பேராலயம் உலகப் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். ஒவ்வொரு ஆண்டும் இங்கு 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சம் மக்கள் சாதி, மத பாகுபாடின்றி பங்கேற்பார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் நடப்பாண்டில் நடைபெற உள்ள திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பின்னர் கொடி மந்திரிக்கப்பட்டு கொடிமரத்திற்க்கு கொண்டு சென்று ஆயர் ஸ்டீபன் ஆண்டனி கொடியேற்றி வைத்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 400க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். திருவிழாவி்ன் முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழா பொதுமக்கள் பங்கேற்பின்றி ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில்  இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Views: - 70

0

0