காங்கிரஸ் பொதுச் செயலாளர் கொலை முயற்சி வழக்கில் 9 நபர்கள் கைது

23 November 2020, 11:12 pm
Quick Share

புதுச்சேரி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் கொலை முயற்சி வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆறுமுகத்தை கடந்த 19ஆம் தேதி அன்று 10பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் வந்த கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்து தப்பியோடியது இதில் அதிஷ்டவசமாக ஆறுமுகம் உயிர் தப்பினார். கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக முதலியார்போட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுந்தர் @ மாந்தோப்பு சுந்தர் படுகொலை செய்யப்பட்டத்தில்,

காங்கிரஸ் பொது செயலாளர் அறிமுகத்திற்க்கும் தொடர்பு இருப்பதாக என்னி சுந்தரின் மகன் ஜோசுவா தன் உறவினர்கள் மற்றும் கூலிபடையை சேர்ந்த சிலர் உடன் சேர்ந்து ஏ.கே.டி அறிமுகத்தை கொலை செய்ய முயன்றுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து முதலியார்பேட்டை போலீசார் ஜோசுவா மற்றும் கொலை முயற்சியில் ஈடுப்பட முயன்றவர்களை தீவரமாக தேடி வந்த நிலையில், அவர்கள் மேட்டுபாளையம் கனரக வாகன முனையம் அருகே உள்ள மூந்திரி தோப்பில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை,

அடுத்து அங்கு விரைந்த போலிசார் அங்கு பதுங்கி இருந்த சரத்குமார்,சேட்டு @ அம்புரோஸ், ஹானஸ்ட் ராஜ், ஆனந்த், பிரேம், நரேஷ், கோகுல், அஜய், ரூபன் ஆகிய ஒன்பது பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மாந்தோப்பு சுந்தர் கொலையில் ஏ.கே.டி அறிமுகத்திற்கு தொடர்பு உள்ளதாக சுந்தரின் மகன் ஜோசுவா கூறியதால், தான் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக கூறியதால் தலைமறைவாக உள்ள ஜோசுவா, மணிகண்டன் மற்றும் மதி ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 0

0

0