தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
Author: kavin kumar25 October 2021, 2:03 pm
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணி உயர்வுகோரி 50க்கும் மேற்பட்ட பேராசியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை அரசு பொறியியல் கல்லூரி சென்ற ஆண்டு முதல் தொழில்நுட்ப கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. மொத்தம் 3,500 மாணவர்கள் படிக்கும் இந்த கல்லூரியில் வெறும் 136 நிரந்தர பேராசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. கல்லூரிக்கான துணைவேந்தர் நியமனத்திற்கான நேர்காணல் முடிந்து, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக கோப்பு காத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டு காலமாக இங்கு பணிபுரியும் 54 பேராசிரியர்களுக்கு பணி உயர்வு தராமல் நிதி நிலைமையை காரணம் காட்டி காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தினுள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 14 ஆண்டுகளாக ஓய்வு பெறும் பேராசிரியர்களின் காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், பணி உயர்வும் அளிக்கமால் இழுத்தடித்து வருவதால் மிகுந்த மனவேதனையில் பேராசிரியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் எனவே தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை அனைத்து பேராசிரியர்களும் தொடர் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட பேராசியர்கள் தெரிவித்துள்ளனர்.
0
0