100வது பிறந்த நாளை மூன்று தலைமுறையுடன் கொண்டாடிய ராணுவ வீரர்

Author: kavin kumar
29 October 2021, 1:28 pm
Quick Share

திண்டுக்கல்: நாட்டிற்காக பல்வேறு போர்களில் பங்கேற்று பீரங்கி படைகள் பணிபுரிந்த ராணுவ வீரர் தனது நூறாவது பிறந்த நாளை மூன்று தலைமுறை பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணம்பட்டி பகுதியில் கடந்த 1921 ம் ஆண்டு பிறந்தவர் பழனிச்சாமி. இவருக்கு இன்று 100 வது பிறந்தநாள் பழனிச்சாமி கடந்த 1946-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கு பீரங்கி படையில் கன் மேன் பணி வழங்கப்பட்டது. தனது ராணுவ பணியின்போது இந்திய சீன போரின்போதும் வங்க தேச பிரிவினையின் போது நடந்த நிறுத்தம் உள்ளிட்ட மூன்று முக்கிய மிகப்பெரிய போர்களில் பீரங்கிப்படையில் பணியாற்றியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் வாகா எல்லை மேற்கு பாகிஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட பகுதிகளில் பணி செய்துள்ளார். இவர் ராணுவ பணியாற்றிய போது ஜவஹர்லால் நேரு. காந்தியடிகள், காமராசர் ஆகியோர் பணி செய்த இடத்தில் நேரடியாக வந்து பாராட்டி உள்ளனர்.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது திண்டுக்கல் பிள்ளையார் பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள் இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்களது குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகள் கொள்ளுப் பேரன், பேத்திகள் என 50க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் வீட்டில் இன்று நூறாவது பிறந்த நாள் விழா மூன்று தலைமுறை குடும்பத்தினர் இணைந்து நடத்தினர். தாய் நாட்டின் மீது கொண்ட தீரா பற்றின் காரணமாக
பிறந்தநாள் கேக்கில் ராணுவ வீரர் துப்பாக்கி, பகவத் கீதை, திருக்குறள், ஓவியங்கள் உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தது மகிழ்ச்சியுடன் பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

குடும்ப உறுப்பினர்களோடு அவர்களது உறவினர்கள் மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்த நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பழனிச்சாமி தனது கரங்களால் திருக்குறளை பரிசளித்து ஆசிர்வாதம் செய்தார். நூறாண்டுகள் தனது வாழ்நாளில் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு தீய பழக்கங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்று பெருமையுடன் கூறி மகிழ்கிறார் பழனிச்சாமி.

Views: - 229

0

0