16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது!

Author: kavin kumar
20 August 2021, 1:31 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் 12 ஆம் படித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் பள்ளி விடுமுறையில் மூன்று மாதம் அதே பகுதியில் உள்ள தனியார் ஜவுளிகடையில் சிறுமி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிரங்குளத்தை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் பாலமுருகன் என்பவர் சிறுமி வேலைபார்க்கும் ஜவுளிக் கடைக்கு அடிக்கடி வந்து ஜவுளி எடுப்பதுபோல் சிறுமியிடம் பேசி பழகி காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் தனியாக பேசுவோம் என கூறி சிறுமியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு யாரும் இல்லாத இடத்தில் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியின் வயிறு பெரிதாக இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமியை பரிசோதித்தில் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் ஆட்டோ ஓட்டுநர் பாலமுருகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை கூறியுள்ளார். இதனையடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் பாலமுருகனை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 209

0

0