அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை: சுமார் 64 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்

12 November 2020, 11:57 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 64 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 4வது தெருவில் செயல்பட்டு வரும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் அதிக அளவில் வருவதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி எஸ்கால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் மாலை 4 மணி அளவில் திடீரென வருகை தந்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அளவுக்கு அதிகமான பட்டாசு பெட்டிகளும் இதுபோல் இனிப்பு பெட்டிகளும் இருந்தது தெரியவந்தது. இதுமட்டுமின்றி இந்த அலுவலகத்தில் 64 ஆயிரத்து 800 ரூபாய் கணக்கில் வராத பணமும் இருந்தது. இதையடுத்து அந்த படத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொள்கிறார்கள். சுமார் 3 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

Views: - 15

0

0