மதுரையில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை முயற்சி:சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Author: Udhayakumar Raman
10 September 2021, 5:33 pm
Quick Share

மதுரை: பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள அண்ணா வீதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் களில் கடந்த இரு தினங்களுக்கு ஏடிஎம் இயந்திரம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஏடிஎம் -க்கு பணம் எடுப்பதற்காக உள்ளே வந்தது போன்று அங்குள்ள சிசிடிவி கேமராவில் ஸ்பிரே மூலம் அதனை மறைக்க முயற்சி செய்ததோடு மட்டுமல்லாமல் கையில் வைத்திருந்த திருப்பலியை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முற்பட்டுள்ளார். இதுகுறித்து வங்கி மேலாளர் மற்றும் தலைமை அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பார்த்ததும் ஏடிஎம் சேதமடைந்து இருப்பதை அறிந்து,

உடனே மதுரை கரிமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு போலீசார் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்,அந்த சிசிடிவி காட்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்திருப்பது பதிவாகி இருந்து. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து இளைஞரை விரைவில் போலீசார் கைது செய்வதாக தெரிவித்தனர்.

Views: - 144

0

0