பட்டாசு கடையின் பூட்டை உடைத்து பட்டாசுகள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

12 November 2020, 2:21 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூரில் பட்டாசு கடையின் பூட்டை உடைத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் ஆம்பூர் சாய்சக்தி திரையரங்கம் அருகில் தீபாவளி பண்டிகையையெட்டி மொத்த விலைக்கு பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்து அனைத்து வகையான சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க சந்திரன் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, ஆம்பூர் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொள்ளை நடந்த கடையில் ஆய்வு மேற்க்கொண்டு இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Views: - 22

0

0