மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு கட்டிடம் கட்ட தடை கோரி வழக்கு: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கூடுதல் தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவு

14 September 2020, 10:12 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு விவசாய நிலத்தை கையகபடுத்தி கட்டிடம் கட்ட தடை கோரியும், விவசாய நிலத்தை தவிர்த்து வேறு இடத்தில் அமைக்க கோரிய வழக்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கூடுதல் தலைமை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்ச்சத்திரதை சேர்ந்த சிவ பத்மநாபன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், “தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக தென்காசி மாவட்டம் மேலகரம் கிராமத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது. இதற்காக மேலகரம் பகுதியிலுள்ள சில விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இந்த விவசாய நிலத்தை சுற்றி ஐந்து பெரும் கண்மாய்கள் உள்ளது. இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த கண்மாய்களை மீன்பிடி ஏலம் விடுவதில் வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். மேலும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் இந்த கண்மாய்களை நம்பியே உள்ளன.

மேலும் தற்போது அரசு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் ,தென்காசி டவுனில் இருந்து இருந்து தொலைவிலுள்ளது. மேலும் பொது மக்கள் வருவதற்கு போக்குவரத்து வசதியும் இல்லை,நகர் பகுதியில் இருந்து தொலைவில் உள்ளது. மேலும் விவசாய நிலங்களை அழித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது,இது ஏற்கத்தக்கது அல்ல, இப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.378.84 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. விவசாய நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு கட்டுவதற்கு பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில்,விவசாய நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மிகத் தீவிரமாக உள்ளது.

இதனால் அப்பகுதியில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும் நிலை உள்ளது ,எனவே தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு விவசாய நிலத்தை தவிர வேறு நிலத்தை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கூடுதல் தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.