செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா நோய் தொற்று

10 November 2020, 9:35 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நிலையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருக்கழுகுன்றம் பொன்பதர் கூடம் – சாலூர் ஆகிய பகுதிகளில் சாலை சீர் அமைப்பு தொடர்பாக ஆய்வு மேற்க்கொண்டார். இரும்புலிச்சேரி நெரும்பூர் ஆகிய பகுதிகளில் ஆகிய மூன்று இடங்களில் பாலாற்று பாலங்களை ஆய்வு செய்ய சென்றார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்,உயர் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்க்கொண்டனர்.

இந்த பரிசோதனையில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ்க்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து சிகிச்சைக்காக சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நிலையத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்,

Views: - 23

0

0