அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்த ஆட்சியர்: மக்கள் இரத்ததானம் செய்ய முன்வர வேண்டுகோள்

By: Udayaraman
1 October 2020, 4:46 pm
Quick Share

மதுரை: மதுரை மாவட்டத்தில் 4000 பேர் சாலை விபத்துக்குள்ளாவதாகவும், அவர்களுக்கு சிகிச்சைக்கு தேவையான இரத்தத்தை சேகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்தார்

தேசிய தன்னார்வலர் இரத்த தான தினத்தை முன்னிட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை இரத்த வங்கியில் மாவட்ட ஆட்சியர் வினய் இரத்ததானம் செய்தார். மேலும் இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்ட ஆட்சியர் நடமாடும் இரத்த வங்கியையும் தொடங்கி வைத்ததோடு, கொரானா நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஊழியர்களுக்கு நினைவுப்பரிசுகளையும் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் வினய் பேசுகையில், மதுரை மக்கள் இரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் எனவும், வருடத்திற்கு மூன்று முறை தாரளமாக இரத்ததானம் செய்யலாம், மேலும் மதுரை மாவட்டத்தில் வருடத்திற்கு 4000 சாலை விபத்துக்கள் நடைபெறும் நிலையில்,அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான இரத்தத்தை சேமிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசு மருத்துவமனையில் அதிகளவில் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

Views: - 32

0

0