கோவையின் அன்னபூர்ணா தயாரித்துள்ள சமையல் மசாலா பொடிகள்..!

3 November 2020, 5:31 pm
Quick Share

கோவை: தமிழகத்தின் பிரபல தனித்துவமான சைவ,மற்றும் அசைவ உணவுகளை தயாரிக்கும் வகையில் புதிய மணம் , சுவையுடன் கூடிய 9 வகை மசாலா வகைகளை அன்னபூரணா மசாலா நிறுவனம் கோவையில் அறிமுகம் செய்துள்ளது.

மசாலா பொடி விற்பனையில் தனக்கென பிரத்யேக சுவையுடன் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற நிறுவனம் அன்னபூரணா மசாலா கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் ஒன்பது புதிய வகை மசாலாக்கள் அறிமுக விழா ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பிரபலமான சுவையான சமையல் மற்றும் பிரியாணி வகைகளுக்கென செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரோஸ்ட் மசாலா , மதுரை மட்டன் சுக்கா மசாலா,

திண்டுக்கல் மட்டன் குழம்பு மசாலா . தூத்துக்குடி பரோட்டா சால்னா மசாலா, கொங்குநாடு நாட்டுகோழி குழம்பு மசாலா, நெல்லை புளி குழம்பு மசாலா , செட்டிநாடு மிளகு குழம்பு மசாலா . ஆம்பூர் பிரியாணி மசாலா மற்றும் திண்டுக்கல் பிரியாணி மசாலா ஆகிய மசாலா பொடி வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக அறிமுக விழாவில் அன்னபூர்ணா மசாலாஸ் அன்ட் ஸ்பைசஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர் விஜய் பிரசாத்,மற்றும் துணை தலைவர் கார்த்திகேயன் காந்தி ஆகியோர் புதிய வகை மசாலா பொடிகளை அறிமுகம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் பிரசாத், தமிழகம் மட்டுமின்றி , நாட்டின் பிற பகுதிகளிலும் கிடைக்கும் வகையில் இதன் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளதாகவும், நறுமணமிக்க , சுத்தமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மசாலா கூடுதலாக , சமைக்கப்படும் உணவுகளை மணமும் , சுவையையும் கூட்டுவதாகவும், கடந்த 1975 முதல் செயல்பட்டு வரும் எங்களது , வாடிக்கையாளர்களின் சுவையை புரிந்து கொண்டு , முன்னுரிமை அளித்து தேவைக்கு ஏற்பவும், எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ள தனித்துவமான சுவை கொண்ட உணவு வகைகளை எளிதாக சமைக்க இந்த மசாலா உதவும் வகையில் தயாரித்துள்ளதாகவும், குறிப்பாக உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்கள் , உள்ளூர் சுவையை பெற எங்களது மசாலா பொடிகளால் சாத்தியப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Views: - 21

0

0