ஆணி படுக்கையில் யோகாசனம் செய்து கொரோனா விழிப்புணர்வு

3 July 2021, 9:28 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இளைஞர் ஆணி படுக்கையில் யோகாசனம் செய்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் 2 ஆயிரத்து 555 ஆணிகள் தைக்கப்பட்ட ஆணிப்படுக்கையில் ஐந்து வகையான யோகாசனங்களை செய்து காண்பித்தார். 25 நிமிடங்களில் வித்யாசம் , சாந்தியாசனம் , பர்வதாசனம் ,சுகாசனம் ,தடாசனம் போன்ற யோகாசனங்களை செய்து காண்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எஸ்.கே.மாதவன் தலைமை தாங்கினார். ஜவகர்லால் நேரு, ராமச்சந்திரன், பங்க் குமார், நவீன் குமார், சதாம் உசேன், மஞ்சுநாத் , ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகாசனத்தில் உலக சாதனை படைத்த தங்கவேல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில், தொடர்ந்து சமூக சிந்தனையுடன் , இன்னும் பல யோக்சனங்களை செய்து காண்பிக்க உள்ளேன். பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன் என்று கூறினார்.

Views: - 30

0

0