குமரி தலைநகரில் உச்சம் தொடும் கொரோனா…! நேரடியாக களமிறங்கிய ஆணையர் ஆஷா அஜித்

18 April 2021, 4:59 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,இன்று கொரோனா பாதித்த இடங்களில் கபசுர குடிநீர் பொடி வழங்கிய ஆணையர் ஆஷா அஜித் நேரடியாக பொதுமக்களை சந்தித்து கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசினார்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனை செய்து சளி மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வடசேரி கனக மூலம் புதுத்தெருவில் அண்மையில் ஒரே தெருவை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனாதொற்று உறுதியானதை தொடர்ந்து அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டது. இந்நிலையில் அதே தெருவில் மேலும் இருவருக்கு கொரோனாதொற்று உறுதியான நிலையில் இன்று மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.இதில் சுகாதார அதிகாரி பகவதி பெருமாள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று கபசுரக் பொடி வழங்கினர்.

Views: - 13

0

0