கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணி: அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்

Author: Udhayakumar Raman
2 August 2021, 1:56 pm
Quick Share

தஞ்சை: கீழவாசல் பகுதியில் உள்ள கடையில் ஒவ்வொரு கடையாக மாவட்ட ஆட்சியர் சென்று கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதமும் விதித்தார்.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும், முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் அதிகரித்து வரும் இந்த தொற்றை கட்டுபடுத்தும் விதமாக விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதைப்போல் தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விழிப்புணர்வு பணியில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள கடையில் ஒவ்வொரு கடையாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதமும் விதித்தார்.

மேலும் ரோட்டில் செல்லும் வாகனங்களை நிறுத்தி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து அவர்களுக்கு முக கவசம் வழங்கி அதிரடி நடவடிக்கையில் ஈடுட்டார். இப்பணியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மேலும் மாவட்ட ஆட்சியரே முகக் கவசம் அணியாமல் காரில் வந்தபோது கார்சாவியை பிடுங்கி அபராதம் விதித்ததோடு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தி முகக் கவசம் அவசியம் குறித்து பயணிகளிடம் தெரிவித்ததோடு அபராதமும் விதித்தார்.

Views: - 102

0

0