குப்பையில் போட்ட தங்கச் செயினை உரியவரிடம் ஒப்படைத்த மாநகராட்சி ஊழியர்கள்…

Author: kavin kumar
14 August 2021, 7:31 pm
Quick Share

சென்னை: குப்பையில் போட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 சவரன் தங்கச் செயினை பத்திரமாக உரியவரிடம் மாநகராட்சி ஊழியர்கள் ஒப்படைத்தார்.

சென்னை கொளத்தூர் ராஜாஜி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் குருராஜன். இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் கௌசல்யா தினமும் பூஜை செய்யும் போது தான் அணிந்திருக்கும் தங்க செயினை சாமி படத்திற்கு போட்டு பூஜை செய்வது கௌசல்யாவின் வழக்கம் அவ்வாறு பூஜை செய்து விட்டு செயினை எடுக்க மறந்து விட்டார். இன்று சாமி படத்திற்கு போடப்பட்ட பூக்களை எல்லாம் எடுத்து குப்பையில் போட்டு அதை வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் வண்டியில் கொட்டியுள்ளார்.

அந்த பூவில் கௌசல்யாவின் 3 சவரன் செயின் இருந்துள்ளது சுமார் ஒரு மணி நேரம் கழித்து சாமி படத்திலிருந்த செயின் காணவில்லை என கௌசல்யாவுக்கு நினைவுக்கு வந்தது. அதன் பிறகு கௌசல்யா தனது மகன் குருராஜனிடம் இது குறித்து கூறியுள்ளார். தனது தெருவில் குப்பை சேகரிக்கும் பாலையா என்ற மாநகராட்சி ஊழியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

ராஜாஜி நகர் தெரு உட்பட அந்தப் பகுதியில் சேகரித்த குப்பைகள் அனைத்தும் மூன்று பெரிய குப்பை தொட்டியில் ஜி.கே.எம் காலனி 33வது தெருவில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு இருந்தன  குருராஜன் செயின் தொலைந்து விட்டது கூறியதை அடுத்து இந்த தகவல் திரு.வி.க நகர் மண்டல அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் பத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வைத்து அந்த 3 பெரிய குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை பிரித்தனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கு பின்பு தங்கச் செயின் பத்திரமாக மீட்கப்பட்டது மாநகராட்சி செயற்பொறியாளர் செந்தில்நாதன் தங்கச் செயினை குருராஜனிடம் ஒப்படைத்தார்.

Views: - 127

0

0