வாய் மற்றும் மூக்கின் மூலம் இசைக்கருவிகளை இசைத்த கோவை இளைஞர்

3 March 2021, 1:21 pm
Quick Share

கோவை: கோவையை சேர்ந்த கோவை தமிழா என்னும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்திவரும் நரேஷ்குமார் வெங்கட் என்பவர் பீட்பாக்ஸிங் என்னும் கலையுடன் ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை தனது வாய் மற்றும் மூக்கின் மூலம் இசைத்து இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம் கோவை புதூரை சேர்ந்தவர் நரேஷ் குமார். இவர் கோவை தமிழா லைவ் சவுண்ட் புரோடக்சன் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் கம்பெனியை கடந்த 8 வருடங்களாக நடத்தி வருகிறார். மேலும் இவர் தனது தனித்திறமைகள் ஆன எம்சி, மேஜிக் ஷோ, பீட் பாக்ஸ், பலூன் மாடலிங், டிஜே போன்ற பன்முக கலைகளை நிகழ்த்தி வருகிறார் . இவர் தனது பீட்பாக்ஸிங் என்னும் கலையை கடந்த நான்கு வருடங்களாக பயின்று இசைத்து வருகிறார். மேலும் அவர் அதனை தனது மூக்கு மற்றும் வாய் நாசிகளை பயன்படுத்தி இரண்டிற்கும் மேற்பட்ட வெவ்வேறு இசைக்கருவிகளுடன் அவர் பீட்பாக்ஸிங்கை நிகழ்த்தி இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

Views: - 5

0

0