வேளாண் சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தல்: பிரதமருக்கு மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் உள்ளிட்டவற்றை பார்சல் மூலம் அனுப்ப வந்த விவசாயிகள் கைது

6 March 2021, 12:18 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் வேளாண் சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமருக்கு மோடிக்கு மண்டை ஓடு எலும்புக் கூடுகள் உள்ளிட்டவற்றை பார்சல் மூலம் அனுப்ப வந்த விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் 3 வேளாண் விவசாயி சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வலியுறுத்தி பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று 100 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், பிரதமர் விவசாயிகளிடம், பேச வேண்டும் என வலியுறுத்தியும், மூன்று வேளை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு மண்டை எழும்பு கூடு அனுப்ப திருச்சி தபால் நிலையத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து அவர்கள் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தின் நோக்கமே மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை மீண்டும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் கொண்டுவந்து ஆண் மற்றும் பெண்களை வம்சாவளியை பெருக்காமல் பார்த்துக் கொள்வதற்காக தான் ஆண்கள் ஆண்மை இழந்த பெண்கள் கருத்தரிப்பதற்கான பெண்மணி இறந்தும் வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த சட்டத்தில் மத்திய அரசு தன்னுடைய அராஜகப் போக்கை காட்டி வருகிறது.

மேலும் இந்த போராட்டத்தில் மண்டை ஓடு எலும்புக் கூடுகள் உள்ளிட்டவற்றை பிரதமருக்கு பார்சல் மூலம் அனுப்பி அனுப்பப்படுவது நோக்கம் இனி சந்ததிகளே இல்லாமல் இந்தியாவையும் தமிழகத்தையும் அழிக்க நினைக்கும் மோடியின் செயலை கண்டித்து இந்த எலும்புக் கூடுகளையும் மண்டை ஓடுகளையும் பார்சலாக அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் 50க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

Views: - 1

0

0