நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
5 November 2021, 2:58 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் கடந்த 15 நாட்களாக பாதாளச் சாக்கடை அடைப்புகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஆத்துமேடு சிவந்திபுரம் இந்த பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை அடைப்பு இருப்பதால் கழிவுநீர் சாலையில் ஓடுவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்ததும், அடைப்புகளை நீக்க உரிய காரணம் இல்லை எனக்கூறி நகராட்சி ஊழியர்கள் அடைப்புகளை நீக்காமல் கால தாமதப்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், மட்டுமின்றி குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு இன்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொது மக்களுடன் பேசி உரிய நடவடிக்கை விரைவில் எடுப்பதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Views: - 172

0

0