500 லிட்டர் கள்ளசாராய மூலப் பொருட்கள் அழிப்பு

5 September 2020, 9:54 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாதகடப்பா வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய கள்ளசாராய வேட்டையில் 500 லிட்டர் கள்ளசாராய மூலப் பொருட்கள் அழிக்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகம் விண்ணமங்கலம் வனப்பிரிவில் மாதகடப்பா காப்புக் காடுகள் உள்ளன. இந்த காடுகளில் தற்போது கள்ள சாராயம் காய்ச்சும் தொழிலும், கள்ள சாராயம் விற்கும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று ஆம்பூர் வனசரகர் மூர்த்தி தலைமையில் வனத்துறையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து மாதகடப்பா ஜமீன்தார் ஏரி, துரை ஏரி, தமிழக – ஆந்திர கௌண்டன்யா காப்பு காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்ச தயார் நிலையில், வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் ஊறல்கள் அழிக்கப்பட்டு, கள்ள சாராய அடுப்புகள் சேதப்படுத்தப்பட்டு கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மரப்பட்டைகள் எரியூட்டப்பட்டன.

Views: - 0

0

0