குழந்தைகளுக்கு எதிரான நடைபெரும் குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு: கேரளாவில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட இளைஞர்

Author: kavin kumar
18 August 2021, 2:28 pm
Quick Share

தருமபுரி: குழந்தைகளுக்கு எதிரான நடைபெரும் குற்றங்களை தடுக்கும் வகையில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டு வரும் கேரளா மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு தருமபுரியில் காவல் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த விமல் என்ற 24 வயதுடைய இளைஞர் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். அதனடிப்படையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த 1 ந் தேதி கன்னியாகுமரியில் தனது விழிப்புணர்வு நடைபயணத்தை துவங்கினார். நேற்று சேலம் வந்த அவர் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு தருமபுரி மாவட்டத்திற்கு வந்தடைந்தார். அவரை தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் சிறப்பான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கண்டறிதல் அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுதல் என்பதை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைதொடர்ந்து நடைபயணமாக கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்ல உள்ளார். இதுகுறித்து விமல் கூறும் போது இளம் வயது திருமணம், குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு, பாலியல் சம்பவங்கள், சிறுமியருக்கு கொடுமை செய்தல் உள்ளிட்டவை சமூகத்தில் பெருகி வருகிறது.

அதனை தடுக்கும் வகையிலும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கடந்த 1 ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்வதாகவும், இதுவரை சுமார் 550 கிலோ மீட்டர் கடந்து விட்டதாகவும், மேலும் 3500 கிலோ மீட்டருக்கு மேல் நடக்க உள்ளதாகவும், இம்மாதிரியான குற்றங்களை மத்திய மாநில அரசுகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறினார்.

Views: - 448

1

0