மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Author: Udhayakumar Raman
25 March 2021, 5:58 pm
Quick Share

தருமபுரி: அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.குமார் இன்று தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரித்தார்.

வருகிற 6 ந் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தருமபுரி மாவட்டம் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு மதசார்பற்ற கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.குமார் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதனடிப்படையில் இன்று அவரது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர், வேட்ரபட்டி, சந்தைமேடு, உள்ளிட்ட கிராம பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தை மேற்க்கொண்டார்.

அப்போது தான் இந்த மண்ணின் மைந்தன் என்றும், இத்தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி அனைத்து திட்டங்களும் செயல்படுத்தபடும். கடந்த 10 ஆண்டுகளாக அரூர் தொகுதியில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் செய்யபடவில்லை. வேலை வாய்பில்லாததால் இப்பகுதி இளைஞர்கள் அண்டை மாநிலங்களில் கூலி வேலை செய்து வருகிறார்கள். என்னை வெற்றி பெற செய்து சட்டமன்ற உறுப்பினராக்கினால் அரூரில் தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

முன்னதாக அப்பகுதிகளில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்ப்பு அளித்ததோடு எங்களது வாக்கு திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரான தங்களுக்கே என்றும் தாங்கள் வெற்றி பெருவது உறுதி என கூறினர். இப்பிரச்சாரத்தின் போது அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வேடம்மாள், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிட்பு பாபு உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 62

0

0