சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய ஒகேனக்கல்

14 January 2021, 4:24 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தொடர்ந்து நான்கு நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெறிச்சொடியது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் விடுமுறை நாட்களில் ஆயிர கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடக மாநிலத்திலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுபதிக்கபடுகின்றனர்.

இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகை சமயத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகைப்புரிய கூடும் என்பதால் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 17 ம் தேதி வரை தொடர்ந்து நான்கு தினங்களுக்கு ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கும், பரிசல் ஓட்டுவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சொடி காணப்பட்டுள்ளது.

Views: - 6

0

0