ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பேக்கரி தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு…

16 August 2020, 6:13 pm
Quick Share

தருமபுரி: ஈச்சம்பாடி அருகே தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பேக்கரி தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பேச்சம்பள்ளி அருகே சந்தூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவர் தருமபுரி மாவட்ட மொரப்பூரில் பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இன்று கொரோனா ஊரடுங்கு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. கடைகள் விடுமுறை என்பதால், தனது நண்பர்களுடன் சக்தி ஈச்சம்பாடி அருகே உள்ள பெரம்மாண்டப்பட்டி தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதியில் சக்தி குளித்து கொண்டிருந்தார். அப்போது நீண்ட நேரம் ஆகியும் சக்தி வெளியே வராததால் சந்தேகமடைந்து நண்பர்கள் அங்கிருந்த பொதுமக்களுக்கு தகவல் அளித்தனர்.

மேலும் இது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் ஆற்றில் குளிக்க சென்ற சக்தியை நீண்ட நேரம் தேடி வந்தனர். இந்நிலையில் சக்தி ஆழமாகன பகுதியில் குளிக்கும் போது மணலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவககல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மொரப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.