பாஜக சார்பில் 500 பேருக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கல்

14 June 2021, 1:29 pm
Quick Share

நீலகிரி: உதகையில் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள சுற்றுலா வாகன ஓட்டிகள் சுற்றுலா வழிகாட்டிகள் 500 பேருக்கு பாஜக சார்பில் கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

கொரோனோ ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டிகள், சுற்றுலா வழிகாட்டிகள், கடந்த 1 மாதமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின்படி நகர பாஜக சேவா அமைப்பு சார்பில் உதகை சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜன் சுமார் 500 பேருக்கு காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே இந்தக் கொரோனா நிவாரணம் தொகுப்பு வழங்கும் நிகழ்வில் ஏராளமான ஓட்டுநர்கள் சுற்றுலா வழிகாட்டிகள் வரிசையில் நின்று ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி தொகுப்புகளை பெற்றுச் சென்றனர். இதில் உதகை நகர தலைவர் பிரவீன், செயலாளர் சுரேஷ்குமார் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்று நிவாரண தொகுப்புகளை வழங்கினர்.

Views: - 59

0

0