ஸ்டாலின் வராறு.. என்ற பாடலுடன் பிரச்சாரம் : திமுக எம்எல்ஏ நடத்திய பேரணி!!

20 February 2021, 1:16 pm
Krishnagiri Rally - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : ஒசூரில், “ஸ்டாலின் தான் வர்றாறு, விடியல் தர போறாரு” என்கிற பிரச்சார பாடலுடன் இருசக்கர வாகன பேரணியை திமுகவினர் நடத்தினர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டே இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் என்கிற நிலையில் தமிழகத்தின் ஆளுங்கட்சியும், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவும் போட்டிப்போட்டுக்கொண்டு தேர்தல் பரப்புரையை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா தலைமையில் இன்று “ஸ்டாலின் தான் வர்றாறு, விடியல் தர போறாரு” என்கிற பாடல் வெளியிடப்பட்டு ஒளிபரப்பபட்டது.

பின்னர் பிரச்சார பாடலை ஒலித்தவாறே திமுகவினர் ஒசூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்க்கொண்டனர். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த திமுக எம்எல்ஏ சத்யா, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டுமென பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் வளர்ச்சி இல்லாமல் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது எனவும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Views: - 0

0

0